fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் ‘சமத்துவ பொங்கல் விழா’

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் ‘சமத்துவ பொங்கல் விழா’

கோவை கே பி ஆர் கல்வி நிறுவனங்களான கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல் லூரி சார்பாக கல்லூரி வளாகத்தில், ‘சமத்துவ பொங்கல் விழா 2023’ மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

சமத்துவ பொங்கல் பண்டிகை

விழாவில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, தமிழர் திருநாளின் முறைப்படி சமத்துவ பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

கே பி ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே பி ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரி கலையரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா, சூரிய பகவானுக்கு படையலிட்டு கொண்டாடப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடத்தில் தமிழர்திருநாள், உழவர் திருநாள், உழவின் சிறப்பு, கால்நடைகளின் சிறப்பு மற்றும் அவற்றை பேணி பாதுகாத்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில், “இன்றைய மாணவர்களின் நல்வாழ்விற்கு வழிகாட்ட அவர்களின் போக்கில் சென்று அரவணைக்க வேண்டும்” அல்லது “நாமே திட்டமிட்டு நடத்திச் செல்ல வேண்டும்” என்ற தலைப்பில் பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்றத்திற்கு கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அகிலா நடுவராக பங்கேற்றார். இரு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் வாதிட்டனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூ ரியின் முதல்வர் மு.அகிலா, கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா தலைமையில் ,பேராசிரியர் கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img