fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சாலை பாதுகாப்பு பொங்கல் - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு

கோவையில் சாலை பாதுகாப்பு பொங்கல் – காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு

இந்த வருட பொங்கல் பண்டிகையை சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகையாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் தன்னார்வ தொண்டு அமைப்பு மாநகர காவல் துறையினருடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பல்வேறு கல்லூரி களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஹெல் மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவு ரைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையா ளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் கூறியதாவது: இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

வருகின்ற 15ம் தேதி கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நாள் 16ம் தேதி மாநகரம் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்துகின்ற வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற உள்ளார்கள். 17ஆம் தேதி பொங்கல் பண்டிகையை சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகையாக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுடன் இணைந்து கொண்டாட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img