fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி - கேப்ஜெமினி இன்ஜினியரிங் : புதுமை ஆய்வகம் துவக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி – கேப்ஜெமினி இன்ஜினியரிங் : புதுமை ஆய்வகம் துவக்க விழா

கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து புதுமை ஆய்வகத்தை கல்லூரி வளாகத்தில் துவக்கி உள்ளது.

கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு வரவேற்புரையில், புதுமை ஆய்வகத்தின் சிறப்பை எடுத்துரைத்தார். கேப்ஜெமினி இன்ஜினியரிங் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பெங்களூரு, கோவை, புனே ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஓர் தலைசிறந்த பொறியியல் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் 50000க்கு மேற்பட்ட பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் இன்று வளர்ந்து வரும் துறைகளான ஆட்டோ மோட்டிவ், மருத்துவம், இண்டஸ்ட்ரி 4.0 ஆகிய பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நிறுவனங் களில் ஒன்றாக திகழ்கிறது.

கேப்ஜெமினி இன்ஜினியரிங், ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி உடன் வானூர்தி, கணினித்துறை, இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் ஐ.ஓ.டி ஆகிய 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தங்களின் மூலம் தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், ஏரோ, மற்றும் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் என அனைத்து துறையை சார்ந்த பொறியியற் மாணவர்களுக்கும் கேப்ஜெ மினி இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றும் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர் களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக, ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி வளாகத்தில் 1500 சதுரடி பரப்பளவுள்ள ஒரு புதுமை மையம், ஆட்டோ மோட்டிவ் துறைக்காக திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ்

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரி டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாரயணசுவாமி தலைமை தாங்கி பேசினார். கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இருந்து ஸ்ரீ பிரசாத் ஷெட்டி, நிர்வாக துணைத் தலைவர் மற்றும் ராஜேஷ் கோசல்ராம், சஞ்சீவ் குப்தா, அதுல் குல்கர்னி ஆகிய துறைத்தலைவர்கள் மாணவர்களுக்கு ஆய்வகத்தின் முக்கியத்துவத்தையும், ஆய்வக வசதிகளை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உரையாற்றினர். கல்லூரி தொழில் துறை இணைப்பு, ஆலோசகர் கணேஷ் நிகழ்ச்சி யினை தொகுத்து வழங்கினார்.

கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தை சார்ந்த பல துறையை சார்ந்த உயர் அதிகாரிகள், மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img