மேட்டுப்பாளையம் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 20 ம் ஆண்டு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி விழாவினை சிறப்பித்தார்.
2021-2022 கல்வியாண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சுவாதிக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரிசு வழங்கல்
2022- 2023 ம் ஆண்டு கல்வியாண்டில் 100% வருகை பதிவு பெற்ற ஆசிரியர்கள் உதவி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் பஞ்சபூதம் நடனம், திருவிளையாடல் புராணம், மற்றும் பல்வேறு நாடகம், யோகா, கராத்தே, சிலம்பம், பல்வேறு நடனங்களில் தம் திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
விழாவில் பள்ளியின் தாளாளர் ரங்கசாமி, செயலாளர் வேலுச்சாமி, இணைச்செயலாளர் சந்திரன்,நிர்வாக அலுவலர் இராமசாமி,நிர்வாக இயக்குநர் பாரத்,தலைவர் குத்தூஸ்,பொருளாளர் ரங்கசாமி,அறங்காவலர் சண்முகசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் செலுவப்பன், முதல்வர் மனோன்மணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



