ஜிஆர்ஜி மேலாண்மைக் கல்லூரி, பிஎஸ்ஜிஆர் கேசிடபிள்யூ-ன் ஆண்டு தோறும் நடக்கும் உர்ஜித் (URJITH) அண்மையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 14 மாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். மொத்தம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பரிசுத் தொகைக்கு 9 நிகழ்வுகளில் வெற்றியாளர்கள் போட்டியிட்டனர்.
சந்திரகாந்தி மெமோரியல் யங் பிசினஸ் லீடர் மற்றும் ஜிஆர்ஜி பெஸ்ட் மேனேஜ்மென்ட் லீடர் மற்றும் ஜிஆர்ஜி பெஸ்ட் மேனேஜ்மென்ட் அணி மற்றும் திங்க் எச் ஆர், டிஜிபெடில், கிரியேடிவ் கியு, போட்டோகிராபி மற்றும் சோசியல் இன்னொவேட்டர்ஸ் ஆகியவை அடங்கும்.
பிசினஸ் குவிஸ் மற்றும் ஸ்டாக் வார்
இரண்டு நிகழ்வுகளான பிசினஸ் குவிஸ் மற்றும் ஸ்டாக் வார் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டன. உர்ஜித் 2023-யை ராபோர்ட் போஸ் துணைத் தலைவரான டி.வி.ஸ்ரீராம் பரிசுகள் வழங்கி நிறைவுரையாற்றினார்.
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ் களும் வழங்கப்படட்ன.
உர்ஜித் ஜிஆர்ஜிஎஸ் எம்எஸ் மாணவர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.



