சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் குறைவான கட்டணத்தில் இயங்கும் துணை விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்கூட், பணிக்கு திரும்புவோம் (back to work) என்ற விற்பனை திட்டத்தை இன்று (ஜன.10) வரை செயல்படுத்துகிறது.
பயணிகள், தங்களது பயணத்தை 30 இடங்களுக்கு ரூ. 5,700 கட்டணம் முதல் திட்டமிடலாம்.
ஸ்கூட் தற்போது, சிங்கப்பூருக்கு, அமிர்தசரஸ், கோவை, ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசாகபட்டணம் ஆகிய நகரங்களிலிருந்து நேரடி விமான போக்குவரத்தை கொண்டுள்ளது.
ஸ்கூட் இந்திய பொது மேலாளர்
சிங்கப்பூர் வழியாக பாங்காங், பாலி, மெல்போர்ன் மற்றும் யோகியர்டா நகரங்களுக்கு ஒரு முனை இணைப்பு போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறது. ஸ்கூட் இந்திய பொது மேலாளர் பிரையன் டோரி கூறியதாவது:
ஸ்கூட்ஸ்சின் மிக முக்கிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகின் பிற பகுதிகளுக்கு இந்திய நகரங்களிலிருந்து செல்ல வசதியான பயண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தரமான சேவைகள், வழங்குவதோடு விரிவாக்க தொடர் பயணத்தையும் கொண்டுள்ளது.
எல்லோரும் பயணிக்கும் வகையிலான கட்டணம், உயர்வான பாதுகாப்பு நிர்ணயம் போன்றவற்றை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் உறுப்பினரிடம் எதிர்பார்க்கலாம், என்றார்.
கடந்த ஆண்டு ஸ்கூட் துவங்கப்பட்ட 10-ம் ஆண்டினை கொண்டாடியது. தற்« பாது இந்த ஏர்லைன்ஸ் விமானம், ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என 15 நாடுகளில் உள்ள 71 நகரங்களுக்கு சென்று வர விமானங்களைக் கொண்டுள்ளது.
இதில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் அகன்ற பகுதியை கொண்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களையும் ஓரிடை இருக்கை வசதியை கொண்டு ஏர்பஸ் ஏ320 குடும்ப விமானத்தையும் கொண்டுள்ளது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கூட், போகெமன் கம்பெனியுடன் பங்குதாரராக மாறியுள்ளது. போக்மான் விமான சாகச திட்டத்தில் ஆசிய பகுதியில் முதல் சர்வதேச விமான நிறுவனமாக இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்ட பிகாசு ஜெட் புதிய அனுபவத்தை தரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஸ்கூட் மாபெரும் டிக்கெட் தரும் வகையிலான திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏர்லைன்ஸ் போக்குவரத்து வழித்தடத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் வகையிலான 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது.



