fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ஈஇன்போசிப்ஸ் புதிய அலுவலகம் திறப்பு

சென்னையில் ஈஇன்போசிப்ஸ் புதிய அலுவலகம் திறப்பு

பொறியியல் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ஈஇன்போசிப்ஸ், சென்னையில் தங்களது 11-வது புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. கடந்த ஆண்டில் ஈஇன்போசிப்ஸ் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக எகிப்து, இந்தியா மற்றும் உலகளவில் மையங் களைத் திறந்தது.

இந்நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், வன்பொருள் வடிவமைப்பு, சிலிக்கான் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் மற்றும் பிளாக் செயின் போன்ற டிஜிட் டல் தொழில்நுட்ப துறைகளில், தற்போது 35 பொறியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஈஇன் போசிப்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் சென்னையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை பணியமர்த்தவுள்ளது.

சென்னை அலுவலகம் திறப்பு விழா குறித்து ஈஇன்போசிப்ஸ் தலைமை இயக்க அதிகாரி சுமித் சேத்தி கூறியதாவது: ஊழியர்கள் தனிப்பட்ட வளர்ச்சியை அனுபவிக்கும் அதே வேளையில், தொழில் ரீதியாக சிறந்து விளங்குவதற்கு உதவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறோம்.

நாங்கள் வழங்கும் பணி சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை இதற்கு பேருதவியாக உள்ளது. சென்னை அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தின் திறன் வாய்ந்த இளைஞர்களை பணியமர்த்த முடியும் என்றார்.

ஈஇன்போசிப்ஸ் நிறுவனம், பார்ட்சூன் 500 பட்டியலில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 104-வது இடத்தில் உள்ள ஏரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

3000 பொறியாளர்களுடன், சிறந்த கிளவுட் திறன்கள், வாடிக்கையாளர் ஒருங்கி ணைப்பு, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மற்றும் நிலையான செயல்பாட்டின் மூலம் ஈஇன்போசிப்ஸ் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது.

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் கூட்டமைப்பு

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் கூட்டமைப்பு (IESA), இந்த ஆண்டின் வடிவமைப்பு சேவைகள் நிறுவனத்திற்கான விருதை ஈஇன்போசிப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.

இந்நிறுவனம் நாஸ்காம் 2021-ம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் நிகழ்வில், அடுத்த தலைமுறை தயாரிப்பு மற்றும் இந்திய தயாரிப்புக்கான இரண்டு முக்கிய விருதுகளை பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img