fbpx
Homeபிற செய்திகள்கோவை பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ரூ.1.52 கோடியில் 305 வீடுகள் பழுதுபார்ப்பு பணி நிறைவு-கோவை ஆட்சியர்...

கோவை பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ரூ.1.52 கோடியில் 305 வீடுகள் பழுதுபார்ப்பு பணி நிறைவு-கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் பேரூராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நிsனைவு சமத்துவபுரம் திட்டம். இந்த குடியிருப்புப்பகுதியில் விளை யாட்டு மைதானங்கள், சமுதாய நலக்கூடம், நியாயவிலைக்கடைகள், படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

அந்தவகையில், மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங் கம்பாளையம் ஊராட்சி, கிணத் துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, எஸ்.எஸ்.குளம் வட்டாரம் வெள் ளைகிணறு (மாநகராட்சி பகுதி) ஆகிய இடங்களில் சமத்துவப் புரங்கள் உள்ளன. கோவை மாவட்டம், சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி-1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்து வபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆனைமலை வட்டாரம்

ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையத்தில் ரூ39லட்சம் மதிப்பில் 78 வீடுகளும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் 92 வீடுகளும், மதுக்கரை வட்டாரம், செட்டி பாளையம் பேரூராட்சியில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வெள்ளகிணறு பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பில் 86 வீடுகளும் என மொத்தம் 321 வீடுகள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 305 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுக்கரை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, எஸ்.எஸ். குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமத்துவபு ரங்களில் குடிநீர் வழங்கல் பணிகள், சாலைபணிகள், தெருவிளக்கு பணிகள், விளையாட்டு மைதானம், சமுதாய நலக்கூடங்கள், நூலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைகடைகள், தந்தை பெரியார் சிலைகள், சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.92.93 லட்சம் மதிப்பீட்டில் 43 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளில் 37 பணிகள் ரூ.27.18 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள மதுக்கரை வட்டாரம், செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத் தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புனரமைப்பு பணிகளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகள் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்து பயனாளிகளான சுப்பிரமணியம், வீரம்மாளிடம் கேட்டறிந்தார்.

அப்பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம் ஆகியவற்றில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்கள் பயணத்தில் மதுக்கரை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img