fbpx
Homeபிற செய்திகள்கர்ப்பிணிகளுக்கு 9 சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம்- இதுவரை பயனடைந்தோர் 2761 பேர், கபசுர குடிநீரால்...

கர்ப்பிணிகளுக்கு 9 சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம்- இதுவரை பயனடைந்தோர் 2761 பேர், கபசுர குடிநீரால் பயன் பெற்றோர் 3,31,936

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்காக 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய பெட்டகத்தினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று காலங்களில் மாவட்டத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் கபசுர குடிநீர் வழங்கியதன் மூலம் 3,31,936 பேர் பயன்பெற்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து, உயிரிழப்பினை வெகுவாக குறைத்தது சாதனையாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் மக்கள் நலப்பணிகளுக்கு, மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:

தமிழக அரசு இந்திய மருத்துவத்துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களை கடைகோடி மக்களுக்கு கொண்டு செல்ல அரும்பாடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்காக நெல்லிக்காய் லேகியம், உளுந்து தைலம், மாதுளை மணப்பாகு போன்ற 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய பெட்டகத்தினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை இதன் மூலம் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று காலங்களில் சித்த மருத்துவத்திற்கென்று தனியாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கல், பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் யோகா, கர்ப்பிணிகளுக்கு சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கல், துணை சுகாதார நிலையங்களின் மூலம் யோகா பயிற்சி, மூலிகை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, தொற்றா நோய்களுக்கு யோகா பயிற்சி, கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய செயலாற்றி வருகிறோம் என்றார் ஆட்சியர்.


நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கும் திட்டம், கர்ப்ப காலத்தில் ரத்தக் குறைவினை நிவர்த்தி செய்யவும் சுகப்பிரசவம் ஏற்படவும் சித்த மருந்துகள் பெரிதும் உதவுகிறது.
கொரோனா தொற்று காலங்களில் மாவட்டத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ், சாதாரண வைரஸ் தொற்று காலங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதன் மூலம் 3,31,936 பொதுமக்கள் பயன்பெற்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து, கொரோனா பரவல் அதிர்ச்சியில் இருந்த பொதுமக்களுக்கு ஆறுதலை அளித்தது. மேலும் உயிரிழப்பினை வெகுவாக குறைத்தது இதன் சாதனையாகும்.
“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது”
இத்திட்டத்தில் பயனடைந்த வல்லநாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் தெரிவித்ததாவது:

கொரோனா காலகட்டங்களில் சித்த மருத்துவம் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பெரும் உதவியாக இருந்தது. வீட்டு சிகிச்சையிலே நோயாளிகள் குணமடைந்ததனர். இதனை கிராமங்கள் தோறும் மக்கள் பயன்பெறும்படி வழங்கிய முதல்வருக்கு வல்லநாடு கிராம மக்கள் சார்பாக நன்றி என்றார்.

“மூலிகை மரக்கன்று”


ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் தெரிவித்ததாவது:
பசுமை காடுகள் வளர்க்க மூலிகை மரக்கன்றுகள் வழங்கல் திட்டத்தில் இன்றைய காலகட்டங்களில் பசுமைகாடுகள் குறைந்து சுற்றுச்சூழல் மாசுபடும் சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசினால் பொதுமக்களுக்கு இந்திய மருத்துவத்துறையின் சார்பில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரிய வகை மூலிகை மரங்கள் அழிந்துவரும் சூழலில், தமிழக அரசின் இந்தத் திட்டம், மருத்துவ குணம் நிறைந்த மூலிகை மரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும். நமது பாரம்பரிய மருத்துவத்தினை காப்பதாக அமைந்த இத்திட்டத்தினை தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“மனச்சோர்வு குறைந்தது”

உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தெரிவித்ததாவது:
விழிப்புணர்வு முகாம்கள், மழைக்காலத்தில் பரவும் நோய்களிலிருந்து தம்மை காக்க மாணவ மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிய முடிந்தது. உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வியலை மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ள பெரிதும் உதவியாக இருந்தது. யோகா பயிற்சிகள் மனச்சோர்வினை குறைத்துள்ளன. உடலுக்கு புத்துணர்வு அளித்தது. நீண்டநாள் இருந்த வாதநோய் குறைந்தது. இத்திட்டத்தினை தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“பலன் தந்த யோகா பயிற்சி”
சாத்தான்குளம் மல்லிகா தெரிவித்ததாவது: அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உயரிய நோக்கோடு செயல்பட்டு வரும் தமிழக அரசு கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், குருதி அழுத்தம், உடல்பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் யோகாபயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் துணை சுகாதார நிலையங்களில் ஆயுஷ் மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சிகளை கிடைக்கச் செய்து வருகிறது, இதன் மூலம் இதுவரை 2317 பேர் பயன் பெற்றுள்ளனர்.

யோக பயிற்சிகள் கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவுகிறது. மாணவ, மாணவிகளின் மன இறுக்கத்தை குறைத்தது. தாய்மார்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வுகால பயத்தினை போக்கியது. மனநலத்தை மேம்படுத்துவதாய் இத்திட்டம் அமைந்துள்ளது.

தொகுப்பு:
சே.ரா.நவீன் பாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img