கோவையில் ஐ.பி.டி.எஸ்.அமைப்பு சார்பில் புதிய இணையதள முகவரி வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து ஐ.பி.டி.எஸ்.அமைப்பு நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாக இயக்குனர் பால் எபினேசர், சி.இ.ஒ. பிரபாகர் ஆகியோர் கூறியதாவது:-
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் என்ற பின்புலத்துடன் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலரை ஒருங்கிணைத்து “பண்பாடு மக்கள் தொடர்பகம்“ என்னும் அமைப்பின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியாக “இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள்” என்ற பெயரில் மே மாதம் மத்திய அரசின் பெருநிறுவனங்கள் துறையில் முறைப்படி இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று WWW.ipds.com/in என்ற இணையதள முகவரியை வெளியிடுகிறோம். இதில் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. தென்மண்டல கிளை அலுவலகம் தமிழ்நாட்டில் கோவையில் செயல்படுகிறது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



