fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் நன்கொடை

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் நன்கொடை

கோவை துடியலூர் வட்ட மலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2003-2007 கல்வி யாண்டில் படித்த மாணவ, மாணவி களின் ஒருங்கிணைதல் சந்திப்பு நடை பெற்றது. முன்னாள் மாணவர் சங்க உறுப் பினர் ராஜேஷ் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு, முன்னாள் மாணவர் சங்க தலைவர் வீணா, மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தனர். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி. வி. ராம்குமார் தலைமை தாங்கி, விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார்

2003-2007 கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்று, அமெ ரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சுமார் நூறு பேர் குடும்பத்தினர்களுடன் பங்கேற்றனர். தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்கள் மற்றும் இப்போது கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகியவற்றை சுட்டிக்காட்டினர்.
கல்லூரி மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குவதற்காகவும், கல்வி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கூடங்களில் பல்வேறு பயிற்சிகள் பெறுவதற்கு உறுதுணையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முன் னாள் மாணவர்கள் வழங்கினர்.

முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் பலருக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது.

விழாவின் ஒருபகுதியாக குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி இசைக்குழு மாணவர்கள் நடத்திய கச்சேரியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வீணா, செயலாளர் செந்தில்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் பா.மதிவாணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img