fbpx
Homeபிற செய்திகள்வீடு, வீடாகச் சென்று கபசுர குடிநீர் விநியோகம்

வீடு, வீடாகச் சென்று கபசுர குடிநீர் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பி யநல்லூர் ஊராட்சி வெள்ளியம்பாளையம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு தற்போது அதிக ரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிகிரான் நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மகாலட்சுமி குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அவிநாசி அரசு பொது மருத்துவமனை அரசு சித்த மருத்துவப் பிரிவு டாக்டர் மாலதி, மருந்தாளுனர் சரவணன் ஆகியோருடன் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

மகாலட்சுமி நகர்

மகாலட்சுமி நகர் மகா கணபதி திருக்கோயில் வளாகத் திடலில் முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் மூலம் மகாலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் அனைவரின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

முகாம் மூலம் 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை மகாலட்சுமி நகர் குடியிருப்பு நலச்சங்கத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மகாராஜன், பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

படிக்க வேண்டும்

spot_img