குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை பெற்றோர் தவற விடக்கூடாது என்று விழிப் புணர்வு கூட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் வலியுறுத்தினார்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் அவினாசிலிங்கம் நிகர்நிலை மகளிர் பல்கலைக்கழகம் விரிவாக்கத் துறையுடன் இணைந்து குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறு முகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சிணாம்பாளையம் பகுதியில் நடந்தது.
வார்டு உறுப்பினர் தேன் மொழி தலைமை வகித்தார்.
ராமமூர்த்தி, சுந்தரம்பாள் முன்னிலை வகித்தனர்.
அவினாசிலிங்கம் பல்கலைக் கழக சமூகப் பணித்துறை
அவினாசிலிங்கம் பல்கலைக் கழக சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவி திவ்யதர்ஷினி வரவேற்றார். ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார். தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குநர்
டி.வி.விஜயகுமார் பேசியதாவது: குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. குடும்பச் சூழல், பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறபோது, அவர்கள் வேறு ஏதேனும் விரும் பத்தகாத செயல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தையே பாழாக்கி கொள்கிறார்கள்.
சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களாக பல்வேறு தொழில்களில் ஈடுபட காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே குழந்தைகளின் எதி காலத்தை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை தவறவிடக் கூடாது என்றார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
லட்சுமி நன்றி கூறினார்.



