கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மாதிரி பள்ளியில் உணவருந்தும் கூடம் அமைப்பதற்காக மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் புரூக் பீல்ட்ஸ் எஸ்டேட் பி.லிட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் அஸ்வின் பாலசுப்பிரமணியம் சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.22 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா உள்ளார்.



