fbpx
Homeபிற செய்திகள்மூத்த ஜவுளித்தொழில் நிர்வாகிகளுக்கு விருது

மூத்த ஜவுளித்தொழில் நிர்வாகிகளுக்கு விருது

மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (ஆர்டிஎப்) சார்பில் மூத்த ஜவுளித்தொழில் நிர்வாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் ராஜ்குமார், இந்திய பருத்தி கூட்டமைப்பின்(ஐசிஎப்) தலைவர் துளசிதரன், சுலோச்சனா காட்டன் நூற்பாலை நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார், கண்ணபிரான் நூற்பாலை நிர்வாக இயக்குநர் ஸ்ரீஹரி, பழநிஆண்டவர் குழுமத்தின் தலைவர் கிட்டுசாமி, கேஜி குழுமத்தின் தலைவர் கேஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த ஜவுளித்தொழில் தலைவர்கள் உள்ளிட்ட பலர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சி

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறுகையில், இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜவுளித்தொழில் அமைப்புகளில் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளில் வகித்து வரும் மூத்த தொழில்துறையினர் உலகளவில் இந்திய ஜவுளித்தொழில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக திகழ்கின்றனர்.

அத்தகைய சிறப்புமிக்க மூத்த நிர்வாகிகளை கவுரவிக்கும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img