அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில், ‘நிலையான எதிர் காலத்திற்கான தரமான ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் 3 நாள் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறு வனத்தின் வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன், முதல் நாள் தொடக்க நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசியதாவது:
உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு ஆய்வுகளால் தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. ஆராய்ச் சியே உயர் கல்வி நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. முனைவர் பட்ட ஆய்வுப் பணியின் தரமானது ஆய்வாளரின் எதிர்கால வளர்ச்சிக்கானது மட்டுமல்ல.
தரமான நிறுவனத்தின் உயர்விற்கான காரணமாகவும் அமைகிறது. ஆய் வில் பல்வேறு கூறுகள் இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்கள் ஆய்வின் பல்வேறு களங்களை அறியவும், ஆய்வு நெறிமுறைகளை உணர்ந்து கொள்ளவும், ஆய்வின் பல்வேறு தளங்களைக் கற்றுக் கொள்வதற்கும் இந்நிகழ்வு உறுதுணையாக இருக்கும் என்றார்.
யோ டெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி
சிறப்பு விருந்தினர் தொழில் நுட்பத்துறை, பயோ டெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் பொதுமேலாளர் மற்றும் தலைவர் டாக்டர் பி.கே.எஸ்.சர்மா பேசும்போது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தரமான கல்வியானது உலகளாவிய கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது.
அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் உயர்கல்விநிறுவனமானது மகளிர் கல்விக்கென உருவாக்கப்பட்டு, ஆய்வினை வளர்த்து பல்வேறு தொழில்முனைவோர்களையும் உருவாக்கி வருகிறது. தரமான ஆய்வு களே சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் காரணமாக அமைகின் றன என்றார்.
நிறுவனத்தின் சார்பில் ஆய்வி தழை வெளியிட்டுச் சிறப்பித்தார்.
துணைவேந்தர் முனைவர் வி.பாரதிஹரிசங்கர் பேசும்போது, கலை மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் ஆய்வின் அகநிலை, புறநிலை குறித்த தொடர்புகளைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் அறிவியல் அணுகு முறையைப் பயன்படுத்தி ஆய்வு செய்தல் என்பது தெளிவற்ற நிலையில் அமைந்துள்ளது என்றார்.
பதிவாளர் சு.கௌசல்யா பேசுகையில், படைப்புகளே முன் ஆய்வின் நோக்கமாக இருந்தது. தற் போது சமூகத்தின் தேவைக்கான உற்பத்தியைத் தருவதே ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது. அதற்கேற்ற ஆய்வுகள் வெளிவர வேண்டும் என்றார். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் முனைவர் பி.லலிதா வரவேற்றார்.
வளமேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியரும், நிகழ் வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் லோகநாயகி நன்றி கூறினார். தொடர்ந்து அமர்வுகள் நடந்தன.