ஊட்டியில் ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்க நீலகிரி கிளை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
முதன்மை அலுவலர் பசவண்ணா முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் தனபால் தலைமை வகித்து, பேரணியின் நோக்கம் குறித்து பேசி துவக்கிவைத்தார். ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரியில் துவங்கிய பேரணி ரோஜாபூங்கா, வால்சம் சாலை, காபிஅவுஸ் சதுக்கம், ஏ.டி.சி. சதுக்கம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது.
பேரணியில், “உடல் நலத்திற்கு மருந்தாளுனரின் பங்கு; மருந்தாளுனரிடம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம், ரசீதின் முக்கியத்துவம், மருந்துகளை வைக்கக் கூடாத இடங்கள்’ என, பல்வேறு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை மாணவ, மாணவியர் ஏந்தி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய மருந்தியல் சங்க நீலகிரி கிளைத் தலைவர்
இந்திய மருந்தியல் சங்க நீலகிரி கிளைத் தலைவர் பேராசிரியர் வடிவேலன், செயலாளர் பேராசிரியர் கணேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர்.
பேரணியில் முனைவர் கௌதமராஜன், முனைவர் பாபு,முனைவர் மெய்யநாதன் ,முனைவர் காளிராஜன், முனைவர் பிரவின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.