கோவை, துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக் னிக் கல்லூரிக்கு மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) பாலிடெக்னிக் கல்லூரிகளை நவீனமயமாக்கல் (MODROB-POL) திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக இக்கல்லூரிக்கு பதின்மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று எழுபத்து மூன்று ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இக்கல்லூரியின் கணிப்பொறிதுறையில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆய்வகம்’ நிறுவ இந்த மானிய நிதி உதவி தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ஆய்வகத்தின் மூலமாக மாணவர்கள் துல்லியமான கணிப்புகளைச் செய்வதற்கும், நிகழ் நேர பயன்பாடுகளைத் தானியக்கமாக்குவதற்கு துணைபுரியும் யுக்திகள் மற்றும் வழிமுறைகள், தரவை அணுகுதல், முன்கூட்டியே செயலாக்குதல், இயந்திர கற்றல் மற்றும் முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்குதல், நிறுவன தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு மாதிரி களை வரிசைப்படுத்துதல் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த ஆய்வகம் மாணவர் களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மானிய நிதி உதவி தொகையை பெறுவதற்கு திட்ட ஒருங் கிணைப்பாளர்களாக செயலாற்றிய கணிபொறி துறைத்தலைவர் டாக்டர் கே. ஜெகதீஸ்வரன், விரிவுரையாளர் வி.கோமதிசங்கரி ஆகியோரை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் டாக்டர்ஆர்.என். உமா, ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



