fbpx
Homeபிற செய்திகள்சென்னையின் கிடங்கு பரிவர்த்தனை அளவு உயர்வு: ‘நைட் பிராங்க் இந்தியா’ஆய்வில் தகவல்

சென்னையின் கிடங்கு பரிவர்த்தனை அளவு உயர்வு: ‘நைட் பிராங்க் இந்தியா’ஆய்வில் தகவல்

சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க் இந்தியா’, அதன் சமீபத்திய – ‘2022-இந்திய கிடங்கு சந்தை அறிக்கை’-ல் 2021 நிதியாண்டில் 3.53 மில்லியன் சதுர அடியுடன் ஒப்பிடும்போது, 2022 நிதியாண்டில் சென்னை கிடங்கு பரிவர்த்தனை அளவு 44% அதிகரித்து 5.1 மில்லியன் சதுர அடிகளாகப் பதிவாகியுள்ளதை வெளிப் படுத்தியுள்ளது.

இது ஒரு கணிசமான வளர்ச்சியாகும்.
சென்னை, கடலுக்கு அருகாமையில் இருப்பதால், கனரக தொழிற்சாலைகளுக்கு விரும்பத்தக்க தளமாகத் திகழ்கிறது.

ஆட்டோமொபைல் தொழிலுக்கும் ஏற்ற சேவைகளை வழங்கி வருகிறது. ஜவுளி உற்பத்தி மற்றும் கனரக தொழில்களுக்கான உற்பத்தியாளர்கள் நகரத்தின் தொழில்துறை மற்றும் கிடங்கு சந்தையை இயக்கும் மற்ற முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷிஷிர் பைஜால் கூறியதாவது:
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கிடங்குத் துறையின் உயர் வளர்ச்சி விகிதம் உயரும் GDP மற்றும் நுகர்வோரின் விளைவாகும்.

இந்தியாவில் கிடங்கு குத்தகையானது தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள அதன் முதிர்ந்த சகாக்களுடன் பொருந்தக்கூடிய பிரம்மாண்ட உச்சத்தை எட்ட இந்தத் துறை தயாராக உள்ளது.

இந்த வளர்ந்து வரும் சந்தை முதிர்ச்சியடையும் போது அதன் போக்கை இயக்குவதற்கு தொழில்முறை நிபுணத்துவத்தை உறுதி செய்யும் கிடங்கு சொத்துக்களை சொந்த மாக வைத்திருப்பதில், அபிவிருத்தி செய் \வதில் மற்றும் இயக்குவதில் எப்போதும் அதிகரித்து வரும் நிறுவன ஆர்வத்தால் இது ஆதரிக்கப்படும்.

எதிர்கால முதலீட்டைப் பொறுத்தமட்டில், கிடங்குத் துறை யானது 2021-ம் ஆண்டு முழுவதுமாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை H1 2022-ல் US$ 1.2 பில்லியனைப் பெற்றுள்ளது.

இது இந்தத் துறையின் மீது உலகளாவிய மற்றும் இந்திய முதலீட்டாளர் நம்பிக்கையை போதுமான அளவு வெளிப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இந்தியாவின் புதிய தளவாடக் கொள்கை ஆகியவை எழுச்சிக்கு உதவும். இரண்டாம் நிலை சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட வலுவான தேவையுடன், நாட்டின் முதல் 8 சந்தைகளுக்கு அப்பால்கூட கிடங்கு தேவை வேகம் பெறுகிறது மற்றும் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களின் வளர்ச்சி நாட்டின் புவியி யல் விரிவாக்கத்தை உள்ளடக்கிய கூடு தல் கிடங்கு மண்டலங்களை மேலும் உரு வாக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img