எஃப்ரென் லாரினா, சாரா ஃபெர்னான்டஸ் ஆகிய ரேலி ஓட்டுனர்களை உள்ளடக்கிய டீம் எம்ஆர் எஃப் டயர்ஸ், 2022 எஃப்ஐஏ ஈரோப்பியன் ரேலியின் புதிய சாம்பி யன்களாக சாதனை படைத்திருக்கின்றனர்.
2022 எஃப்ஐஏ ஈஆர்சி சாம்பியன்ஷிப்பில் மொத்தமுள்ள எட்டு சுற்று களில் இரண்டு சுற்றுகள் இன்னும் மீதமிருக்கும் நிலையிலேயே டீம் எம்ஆர்எஃப் டயர்ஸ் இந்த சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறது.
எம்ஆர்எஃப் டயர்ஸ்-க்கு இதுவே முதல் எஃப்ஐஏ ஈஆர்சி விருதாகும். 2020ம் ஆண்டில் தான் இந்த சாம்பியன்ஷிப்பில் நுழைந்த டீம் எம்ஆர்எஃப், உலகின் மிகச்சிறந்த குழு க்களோடு போட்டி போட்டு அவர்களை வென்று கௌரவமிக்க இச்சாம் பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது.
எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் மேமன் கூறியதாவது: ஐரோப்பிய ரேலி போட்டிகளில் மிக உயர்ந்த அளவில் செயல்பட்டு சாம்பியன் ஷிப்பை வென்றிருக்கும் டயர்களை வழங்குவதற்கு, ஒட்டுமொத்த குழுமம் ஆற்றிய சிறப்பான, கடு மையான உழைப்புக்கு சாட்சியமாக இருக்கிறது.
இதன் மூலம் எமது உயர்வான தொழில்நுட்ப திறன்களை நாங்கள் வெளிப் படுத் தியிருக்கிறோம். இந்த சிறப்பான சாதனையை நிகழ்த்தியதற்காக எஃப்ரன் லாரினா, சாரா ஃபெர் னான்டஸ் ஆகிய ரேலி ஓட்டுனர்களையும் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு ஆதரவளித்த எமது குழுவிலுள்ள பிற ஓட்டுனர்களையும் மனதார பாராட்டி மகிழ் கிறேன்.
ஐரோப்பியன் ரேலி சாம்பியன்ஸ் 2022 என்ற மகுடம் சூட்டப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் கௌரவமும், பெருமையும் தரும் தருணம் என்பதில் ஐயமில்லை என்றார்.
எஃப்ரன் லாரினா கூறி யதாவது: கடந்த சீசன்களில் ஒட்டுமொத்த குழுவும் ஆற்றிய கடும் உழைப்பும், பொறுப்புறுதியுமே இந்த வெற்றியை இப்போது சாத்தியமாக்கியிருக்கிறது.
இந்த ஆண்டுமுழுவதும் கடுமையாக உழைத் திருக்கிறோம். எம்ஆர்எஃப் டயர்ஸ் உடன் சேர்ந்து கௌரவமிக்க விருதை வென்றிருப்பதில் மிகவும் பெருமைகொள்கிறேன்.
இன்னும் இரு சுற்றுகள் எஞ்சியிருக்கும் நிலையில் இதை வென்றிருப்பது, எந்தளவுக்கு ஒரு மிகச் சிறப்பான தயாரிப்பை எம்ஆர்எஃப் டயர்ஸ் தந்திருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகிறது.
இன்னும் சிறப்பான முடிவுகளையும், சாதனை களையும் எட்டுவதற்கு தொடர்ச்சியான உழைப் பும், பொறுப்புறுதியும் இனியும் தொடரும் என் றார்.



