திண்டுக்கல்லில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி மற்றும் குயின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர், மாணவி களுக்கான கால்பந்து போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதன் இறுதி போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி அணி, அனுமந்தராயன் கோட்டை லயோலோ பள்ளி அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி அணி வேடசந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கால் பந்து கழகச் செயலாளர் சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். கால்பந்து கழக தலைவர் சுந்தர் ராஜன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஷர்மிளா வாழ்த்துரை வழங்கினர் சிறப்பு விருந்தினராக கல ந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்நாசருதீன் போட்டி யில் முதலிடம் பெற்ற புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம், 2ம் இடம் பிடித்த அனுமந்தராயன் கோட்டை லயோலா மேல் நிலைப் பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அங்குவிலாஸ் மேல்நிலை ப்பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம், 2ம் இடம் பிடித்த வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 3 ஆயிரமும், 3ம் இடம் பிடித்த ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி அணிக்கு கோப்பை மற்றும் ரூ 2 ஆயிரம் பரிசுத்தொகையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மே ரி, ரோட்டரி சங்க செயல £ளர்கள் ராஜகோ பாலன், மல்லிகா திண் டுக்கல் மாவட்ட கால்பந்து கழக பொறுப் பாளர்கள் கலைச் செல் வன், ஈசாக்கு உட்பட பலர் பங்கேற்றனர்.



