கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்குட்பட்ட அவினாசி சாலை வழியாக டைடல் பார்க், விளாங்குறிச்சி செல்லும் சாலையில் பெய்த மழையில் சேதமடைந்த பகுதியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
உடன் உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



