fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஹேப்பி ஹோம் - புதிய லயன்ஸ் சங்கம் துவக்கம்

கோவையில் ஹேப்பி ஹோம் – புதிய லயன்ஸ் சங்கம் துவக்கம்

கோவையில் 324 சி மாவட்டத்தை உள்ளடக்கிய லயன்ஸ் மாவட்டத்தில் புதியதாக ஹேப்பி ஹோம் எனும் சங்கத்தை மாவட்ட ஆளுநர் ராம்குமார் முறைப்படி துவக்கி வைத்தார்.

புதிய சங்கத்தின் தலைவராக பூமிநாதன், செயலாளர்களாக சசி குமார், ஹரிபிரியா, பொருளாளராக புகழேந்தி ஆகியோருக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவரும், முன்னாள் மாவட்ட ஆளுநருமான டாக்டர் பழனிச்சாமி பொறுப்புக்களை வழங்கினார்.

கவர்னர் ராம்குமார் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பேசியதோடு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் துணை நிலை ஆளுநர் நித்தியானந்தம் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆறுமுகமணி, சண்முகம் மற்றும் வட்டார தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img