fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பரவசப்படுத்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பரவசப்படுத்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் இறைபணி, சமூக பணி, கல்வி பணி என அனைத்திலும் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணமடம் சார்பில், பள்ளிகளுக்கிடையே பல போட்டிகள் நடத்தப்பட்டன.

அதையொட்டி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு நிகழ்வாக, தனித் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுவாமி ராகவேஷாநந்தர் தலைமையில் நடை பெற்றது.

சிறப்பு அழைப்பாளர்க ளான கல்வி அலுவலர் தமோதரன், ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்

விழாவில், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச் சிகள் அனைவரையும் பர வசத்தில் ஆழ்த்தியது.

கூடலூர் மாணவி சிம்லாசெர் கால்களால் அற்புதமாக ஓவியம் வரைந்து பாராட்டுகளை பெற்றார்.

இந்த விழா இறைபணி, சமூக பணி, கல்வி பணியின் இன்றைய அவசியத்தை உணர்த்துவதாக இதில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img