தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து லாபமீட்டிவரும் ஈஸி மை டிரிப் (EaseMyTrip), மீண்டும் வளர்ச்சியைப் பதிவுசெய்து அதன் நிதியாண்டைத் தொடங்கியுள்ளது.
இந்த காலாண்டும் ஈஸி மை டிரிப்க்கு ஒரு பெரிய மைல்கல் ஆண்டாகத் திகழ் கிறது. தனது 14-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஈஸி மை டிரிப் நிறுவனத் திற்கு இது ஒரு பெருமையான தருணமாகும்.
நிறுவனம் தனது ஆண்டு நிறைவை வாடிக்கையாளர்களுக்கான மெகா விற்பனையை அறிவித்து, தள்ளுபடிகளை வழங்கிக் கொண்டா டுகிறது. ஈஸி மை டிரிப் எப்பொழுதும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக இருந்து வருகிறது.ஸ்டாண்டர்ட் சார்ட்டர் டுடன் இணைந்து ஒரு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
ஈஸி மை டிரிப் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. இதில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வருடாந்திர லாபம் ஆண்டுக்கு 125 சதவீதம் மற்றும் காலாண்டு லாபம் ஆண்டிற்கு 45.36 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனம் இந்தியாவின் முதல் 100 யூனிகார்ன்களின் எலைட் கிளப்பில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், பூட்ஸ்ட்ராப்டு நிலையில் மற்றும் தொடர்ந்து லாபம் ஈட்டுவதுடன், மொத்த முன்பதிவு வருவாயை (GBR) இந்த காலாண்டில் 356.7 கோடி ரூபாயில் இருந்து INR 1,663.1 கோடிக்கு அதிகரித்து 366 சதவீதம் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
வரிக்குப் பிந்தைய லாபம்(PAT) 2022-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டின் INR 14.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 2023-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் INR.33.7 கோடியாக அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க ஆத ரவுடன், வளர்ந்து வரும் தேவையின் காரணமாக இந்தத் தொழில் தற்போது உச்சநிலையை எட்டியுள்ளது.
இதன் விளைவாக, பயணச்சூழலின் மறுமலர்ச் சிக்குக் கைகொடுக்கும் அதே வேளையில் நிலையான இலாபங்களையும் வழங்கும் தனது இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்க ஈஸி மை டிரிப் தயாராக உள்ளது



