பொள்ளாச்சி, மணக்கடவில் உள்ள வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் 15-வது ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது.
வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன இயக்குநர் முனைவர் கெம்புசெட்டி தலைமை தாங்கினார்.
கல்லூரி மாணவர் மன்ற ஆலோசகர் உதவி பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், முதன்மையர், முனைவர் வெங்கடேச பழனிச்சாமி பேசுகையில், விவசாயத்தின் பங்களிப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வணிகர்களின் முக்கிய பங்கான உணவு ஏற்றுமதிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் குமாரவடிவேல், கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்.
மாணவர் மன்றத் தலைவர் தரனேஷ் நன்றி கூறினார்.



