இந்தியாவின் சிறந்த தேநீர் விற்பனை பிராண்டான சிஎஸ்பி (சாய் சுத்தா பார்) தமிழ்நாட்டில் தனது இரண்டாவது விற்பனை நிலையத்தை சோழி ங்கநல்லூரில் திறந்துள்ளது.
தேநீர் இந்தியாவில் வெகுஜன மக்களின் விருப்பமான பானங்களில் ஒன்றாகும். சிஎஸ்பி தேநீர் விரும்பிகளுக்கு பல்வேறு வகையான தேநீர்களை மண் குவளைகளில் வழங்கி அவர்களது தேநீர் தருணத்தை சுவை மிகுந்ததாகவும் இனிமைய £கவும் மாற்றுகிறது.
திறப்பு நிகழ்வில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், இந்த விற்பனை நிலையத்தின் தனித்துவத்தை என்னால் பார்க்கவும் உணரவும் முடிகிறது.
நீங்கள் சிஎஸ்பியில் தேநீர் குடிக்கும் போது ஒவ்வொரு வகையான சுவைக்கும் இங்கு ஒவ்வொரு வகையான தேநீர் கிடைக்கப்பெறுகிறது. எனக்கு இதில் பிடித்தது சாக்லேட் தேநீர் ஆகும் என்றார்.
“சென்னையில் புதிய விற்பனை நிலையம் தேநீர் விரும்பிகளுக்கும் தேநீருக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது. புதிய தேநீர் சுவைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் இன்னும் பலவற்றை வழங்குகிறோம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் நிறுவனக் குழு தேநீர் வழங்கப்பட வேண்டிய இடம் மற்றும் இலக்குப் பகுதியில் ஆய்வு செய்தது. வாடிக்கையாளர்களுக்கு வசதியான இருக்கைகள் சாத்தியக்கூறு குறித்தும் ஆய்வு செய்தனர்.
எனவே தேநீர் விரும்பிகள் தேநீரை முழுமையாக அனுபவிக்கும் வகையில் இந்த தேநீர் விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், சிஎஸ்பியின் குழு அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் பார்வை யாளர்களும் வாடிக்கை யாளர்களும் எளிதாக வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்தி மகிழலாம்.
மண் குவளை தேநீர் சுவையை உலகம் முழுவதும் பரப்புவதையும், எங்கள் “தேஷ் கி மிட்டி” குறிக்கோள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று சாய் சுத்தா பார் இணை நிறுவனர் அனுபவ் துபே கூறினார்.



