fbpx
Homeபிற செய்திகள்கருமத்தம்பட்டி பகுதியில் 354 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர்கள் கைது

கருமத்தம்பட்டி பகுதியில் 354 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர்கள் கைது

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக மேற்கொண்ட நடவடிக்கையில், கருமத்தம் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப் படையில் காவல் ஆய்வாளர் ராஜதுரை, உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன் மற்றும் காவலர் லோகநாதன் ஆகியோர் வாகராயம்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் குமார் (40), ரஞ்சித் குமார்(26) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கருமத் தம்பட்டி ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர்கள் மாதரம்(30), தீபாரம்(27) மற்றும் சோமனூர் ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் சோகரம்(22), ஆகியோர் விற்பனை செய்வதாக தகவல் தெரிவித்தனர். 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 354 கிலோ எடையுள்ள புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இருகடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வ பாண்டியன் குடோனுக்கு சீல் வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img