fbpx
Homeபிற செய்திகள்வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம்: விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி

வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம்: விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி

 நீலகிரி மாவட்டம் உதகை வட்டாரம் தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கி வரும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2022-23, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண் மை முகமையின் (அட்மா) மூலம், உள் மாவட்ட அளவிலான வீட்டுத்தோட்டம்/ மாடித்தோட்டம் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் உதகை வட்டம் தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்காக நடை பெற்றது.

வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் சதீஷ், அட்மா திட்டம் குறித்து விளக்கினார்.
பயிற்சியில் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் ராஜா, இயற்கை வேளாண்மை மற்றும் வீட்டுத் தோட்டம்/மாடித் தோட்டம் குறித்து விளக்கினார்.

தற்போது உணவே நஞ்சாக மாறி யுள்ள சூழ்நி லையில் இயற்கை வேளாண்மை யின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்க ளின் தோட்டத்தில் உள்ள பொருட்களை கொண்டும் தயாரிக்கும் முறைகளையும் விளக்கினார்.

தோட்டக்கலை அலுவலர் அரவிந்த், தோட்டக்கலை துறையில் உள்ள மானிய திட்டங்கள் மற்றும் ரிசீ கிசான் திட்டம் குறித்து விளக்கினார்.

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெகதீசன் மற்றும் மணிகண்டன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் குறித்து விளக்கி மரக்கன்றுகள் விநியோகம் செய்தனர்.

அட்மா திட்டத்தினை சார்ந்த உதவி தொழில் நுட்ப மேலாளர் மதி.அஸ் வினி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img