Homeபிற செய்திகள்அகில இந்திய பல்கலை. இலக்குப்பந்து போட்டி: சவிதா பல்கலை. வீரர், வீராங்கனைகள் சாதனை

அகில இந்திய பல்கலை. இலக்குப்பந்து போட்டி: சவிதா பல்கலை. வீரர், வீராங்கனைகள் சாதனை

சவிதா நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இலக்குப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) போட்டி, நடைபெற்றது.

பல்வேறு பல்கலைக் கழகத்திலிருந்து இலக்குப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். ஆண்கள் பிரிவில் நாக் அவுட் முறையிலும், பெண்கள் பிரிவில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டி முடிவில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை சென்னை, சவிதா பல்கலைக்கழகம், இரண்டாம் இடத்தை ஆந்திரா யூனிவர்சிட்டி, விசாகப்பட்டினம், மூன்றாம் இடத்தை சென்னை, தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், நான்காம் இடத்தை மீரட், ஐ ஐ எம் டி யூனிவர்சிட்டி ஆகிய அணிகள் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை சென்னை சவிதா பல்கலைக்கழகம், இரண்டாம் இடத்தை விசாகப்பட்டினம், ஆந்திரா பல்கலைக்கழகம், மூன்றாம் இடத்தை தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் பிடித்தன.

ஆண்கள் பிரிவில் பெஸ்ட் டைமன் வீரர் அஜித் (சவிதா பல்கலைக்கழகம்), பெஸ்ட் ஷூட்டர் காமராஜ் (ஆந்திரா பல்கலைக்கழகம்) பெண்கள் பிரிவில் பெஸ்ட் டைமண்ட் வீராங்கனை பாக்கியலட்சுமி (ஆந்திரா பல்கலைக்கழகம்) பெஸ்ட் ஷூட்டர் வெண்மதி (சவிதா பல்கலைக்கழகம்) ஆகியோர் விருதுகளை தட்டிச் சென்றனர்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் என்.எம். வீரையன், நிறுவனர் மற்றும் வேந்தர், டாக்டர் ரம்யா தீபக், இயக்குனர், உடற்கல்வி துறையின் தலைவர் வே.வாழ்வீமராஜா, போட்டியின் அமைப்பு செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற இலக்குப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img