Homeபிற செய்திகள்கோவை ராமநாதபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை ராமநாதபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.63க்குட்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி வளாகத்திலுள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்திடவும், பழுதடைந்த கட்டிடங்களை பராமரிக்கவும் வேண்டுமென அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img