fbpx
Homeபிற செய்திகள்இதயக் கோளாறுடன் வந்த ஆசிரியரை காப்பாற்றி சாதனை புரிந்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்

இதயக் கோளாறுடன் வந்த ஆசிரியரை காப்பாற்றி சாதனை புரிந்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்

மாரடைப்பு, இதயக் கோளாறு டன் அழைத்து வரப்பட்ட 55 வயது பள்ளி ஆசிரியைக்கு உடனடி சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்.

ராதா பாலாஜி (வயது 55) பள்ளி ஆசிரியை. கடுமையான மாரடைப்புடன், மெதுவான இதயத்துடிப்பு மற்றும் இருதய அதிர்ச்சி போன்ற சிக்கல்களுடன் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

உடனடியாக அவருக்கு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியும் மற்றும் அடைப்பு இருந்த ரத்த நாளத்தில் ஸ்டெண்ட் பொருத்துதலும் செய்யப்பட்டன.
காவேரி மருத்துவமனையின் இதய மின் உடலியங்கியல் மருத்துவத் துறையின் டாக்டர் தீப் சந்த் ராஜா கூறியதாவது: இத்த கயை மருத்துவ நிலையானது போஸ்ட் MI VT ஸ்டார்ம் என அழைக்கப்படுகிறது.

அதாவது புயலின் மைய சூழல் பகுதியில் நோயாளி சிக்கி இருப்பதையே இது குறிக்கிறது. மருந்துகளின் மூலம் இயல்பு நிலைக்கு VT திரும்பவில்லை. இதயத்தின் உட்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வு சரிவு மற்றும் நீண்ட QT சிண்ட்ரோம் ஆகியவற்றின் காரணமாக இப்பெண்ணின் நிலை மை சிக்கலானதாக இருந்தது.

ஆகவே 4-வது நாளன்று, இதய லயமின்மையை ஏற்படுத்துகின்ற செல்களை அழிப்பதற்கான ஒரு செயல்முறையான ரேடியோ ஃபிரீக்வென்சி அப்லேஷன் என்று மருத்துவ செயல்முறைக்காக ஹைபிரிட் கேத்லேப் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதய கீழறையில் மிகை இதயத்துடிப்பை முடுக்கி விடுகின்ற ஆதாரத்தை கண்டறிவதற்காக ஒரு மேம்பட்ட முப்பரிமாண நேவிகேஷன் சிஸ்டம் பயன்படுத் தப்படுகிறது.

6 மணி நேரம் நீடித்த கடினமான நீண்ட செயல்முறைக்குப் பிறகு VTபிரச்சினையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது ரத்த அழுத்தமும், ரத்த ஓட்ட செயல்பாடும் விரைவாக மேம்பட்டன.

அதன்பிறகு படிப் படியாக அதிகரிக்கப்பட்ட மொபி லிசேஷன் மற்றும் ஊட்டச்சத்துடன் இதய மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டது. 14-ம் நாளன்று குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என் றார்.

மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், அவசி யமான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், இதய லய கோளாறுகளில் இத்தகைய கடும் சிக்கல்களுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடிகிறது.

பள்ளி ஆசிரியையை காப்பாற்றியதற்காக டாக்டர்கள் சி.சுந்தர், தீப் சந்த் ராஜா மற்றும் குழுவினரை பாராட்டுகிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img