ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவி இந்திய கடற்படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை துடியலூர் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியி யல்கல்லூரி தொழில்நுட்ப துறையைச்சேர்ந்த முன் னாள் மாணவி அக்க்ஷய பிரியா.
கல்லூரி தேசிய மாண வர் படையைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி மாதம் போபாலில் நடைபெற்ற தகுதி சுற்று தேர்வில் வெற்றி பெற்று இந்திய கடற்படையில் சப்லெஃப்டினென்ட் அதிகாரி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கல்லூரி தேசிய மாணவர் படையில் பல்வேறு பிரிவில் சாதனை, சிறந்த சேவை பிரதம மந்திரியின் பேரணி மற்றும் குடியரசு தின அணிவகுப்பு என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை புரிந்த அக்க்ஷய பிரியாவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசாமி, துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர். அலமேலு. துணை முதல்வர் முனைவர் ப.கருப்புசாமி, என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் முனைவர் மா.ரமேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



