கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100க்குட்பட்ட மேட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டபோது எடுத்தபடம்.
உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



