fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சாதனை

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சாதனை

கோவை 2 TN AIR SQUADRON NCC, ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாமினை (CATC-I) கோவையில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது. அதில் 13 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கேற்று மொத்தம் 18 விருதுகளில் 9 விருது களைப் பெற்றுள்ளனர். ‘பெஸ்ட் டிரில்’ விருதினை விக்னேஷ் மற்றும் ஹேமந்த்குமார் பெற்றனர்.

‘பெஸ்ட் அகெடமிக்ஸ்கான’ விருதினை அகிலேஷ், இசபெல்லா, சச்சின், சௌமிதா ஆகியோர் பெற்றனர். ‘பெஸ்ட் பையரிங்க்கான’ விருதினை ஜெயசக்திவேல் மணி, காவியா ஆகி யோர் பெற்றனர்.

‘ஓவரால் பெஸ்ட் கேடட்’ விருதினை இசபெல்லா பெற் றார். கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். அகிலா என்.சி.சி பயிற்சி முகாமில் பங்கேற்று விருதுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img