fbpx
Homeபிற செய்திகள்கோவை வி.ஜி.எம் மருத்துவமனை டாக்டர் மோகன் பிரசாத்துக்கு சேவா ரத்னா விருது

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை டாக்டர் மோகன் பிரசாத்துக்கு சேவா ரத்னா விருது

கோவை வி.ஜி.எம் மருத்துவ மனை டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்திற்கு சேவா ரத்தினா விருது வழங்கப்பட்டு உள்ளது.

கோவை விஜிஎம் மருத்துவ மனையில் உலக மருத்துவர்கள் தினம், அலையன்ஸ் கிளப் ஆப் ஹில் சிட்டி, உதவும் கரங்கள் மற்றும் ரோட்டரி டவுன் நகரம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர் இ.சந்திரா, சங்கத்தின் மாவட்ட ஆளுநர் டி.சீனி வாசன் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும், முதல் துணை ஆளுநர் அலை டாக்டர் வி.சீனிவாச கிரி, இரண்டாம் துணை ஆளுநர் மற்றும் மாவட்ட தலைவர் அலை எஸ்.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறந்த மருத்து வர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி சேவா ரத்னா விருதுகள் வழங்கப்பட் டன. அதன் விவரம் வருமாறு:

சேவா ரத்னா விருது பெற்ற மருத்துவர்கள்: டாக்டர் இ.சந்திரா (இணை இயக்குநர், அரசு சுகாதார துறை, கோவை), டாக்டர் ஏ.நிர்மலா (முதல்வர், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை), டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் (குடல் நோய் மருத்துவர், தலைவர், வி.ஜி.எம் மருத்துவமனை), டாக்டர் எஸ்.வி.கந்தசாமி (சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர், தலைவர், வேதநா யகம் மருத்துவமனை).
மருத்துவ துறையில் சிறந்த மனித நேயத்தோடு செயல்பட்டதற்காக சிறந்த மனித நேய விருது பின்வரும் மருத்துவர்களுக்கு வழங்கப் பட்டது.

மனிதநேய விருது பெற்ற மருத்துவர்கள்:
டாக்டர்.சுமன் (எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், வி.ஜி.எம் மருத்துவமனை), டாக்டர். மதுரா பிரசாத் சுமன் (இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவர், வி.ஜி.எம் மருத்துவமனை), டாக்டர்.கோகுல் கிருபா சங்கர் (அறுவை சிகிச்சை நிபுணர், வி.ஜி.எம் மருத்துவமனை), டாக்டர்.வம்சி (இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவர், வி.ஜி.எம் மருத்து வமனை), டாக்டர்.மித்ரா பிரசாத் (சிறப்பு குடல் நோய் மருத்துவர், வி.ஜி.எம் மருத்து வமனை).

விருதுகளை அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் டி.சீனிவா சன், டாக்டர் சீனிவாச கிரி, ரோட்டரி சங்கத்தலைவர் சுந்தரேசன், ஹில் சிட்டி அலையன் சங்கத்தலைவர் சதீஷ்குமார், உதவும் கரங்கள் தலைவர் செந்தில்குமார், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட துணை ஆளுநர் குட்வின் ரோட்டரியன் மற்றும் குமரன் ஆலானசுந்தரம் ஆகி யோர் வழங்கினர்.

விருது பெற்றவர் களை அலையன்ஸ் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் சங்கவ் செல்வராஜ், ரோட்டரி குட்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவுக்கான ஏற்பாட்டை ஹில்சிட்டி அலையன்ஸ் சங்கத் தின் செயலாளர் சரவணராஜ், பொருளாளர் ஆத்மா சம்பத் மற்றும் வி.ஜி.எம் தினேஷ், அஸ்வின் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img