கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம் இன்று காலை (வியாழக்கிழமை) விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா தலை மையில் நடைபெற்றது .
கூட்டத்தில் துணை கமிஷனர் சர்மிளா , துணை மேயர் வெற்றி செல்வன், சுகாதாக குழு தலைவர் மாரிச்செல்வன் நகரமைப்பு தலைவர் சந்தோஷ் மற்றும் குழு தலைவர்கள் கவுன் சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுண்சிலர்கள் பாதாள சாக்கடை திட்டம் கோவையில் பல இடங்களில் முடிவு பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் பாதாள சாக்கடை வருடாந்திர சேவைக் கட்டணம் மற்றும் வைப்பு தொகை இணைப்புதொகை குறித்த தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த தீர்மானம் ஒத்திவைக் கப்பட்டது. தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
முன்னதாக அ.தி.மு.க. காவுன் சிலர் குழு தலைவர் பிரபாகரன் கூறும்போது, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி இடத்தை தனியாருக்கு கொடுப்பதை ஏற்க முடியாது. இதை தடுக்க வேண் டும். தவறினால் போராட்டம் நடத் தப்படும், என்று கூறினார்.



