fbpx
Homeபிற செய்திகள்ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் கிராமப்புற- பழங்குடியின மக்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு நிகழ்ச்சி

ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் கிராமப்புற- பழங்குடியின மக்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு நிகழ்ச்சி

புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மைசூரு ஜே எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீலகிரி இந்திய மருந்து சங்கம் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலின உணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்து நெடுகல்கோம்பை கிராமத்தில் இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மருந்து வேதியியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர் டாக்டர் கௌரம்மா வரவேற்புரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணப்பாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் மற்றும் துறையின் தலைவரும் இணை பேராசிரியருமான முனைவர் ஆர்.காளி ராஜன் எடுத்துரைத்தனர்

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமை உரையாற்றினார். முனைவர் மதுசூதனன் புரோகித் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இரண்டு நாள் நடை பெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி டாக்டர் என்.அய்யாதுரை, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின், மகளிர் ஆய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கமலவேணி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பிருந்தா சுரேஷ், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர். பி. பாபு, பேராசிரியர் டாக்டர் வடிவேலன், உதவி பேராசிரியர் சி. ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.விரிவுரையாளர் முனைவர் ஸ்ரீகாந்த் ஜூபுடி நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் ஏற்பாடுகளை தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img