ராமநாதபுரத்தில் பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அர விந்த் கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிக ளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத் துவமனை வழங்கிய ரூபாய் 900 மதிப்புள்ள தைராய்டு மற்றும் சர்க்கரை இலவச ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் அன்வர் அலி வரவேற்றார்.
பி.வி.எம் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் அப்துல் ரசாக் அறிமுக உரை நிகழ்த்தினார். மருத்துவ முகாமை முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார் மேகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிவிஎம் அறக்கட்டளை தலைவர் மற்றும் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன் னாள் தலைவர் பக்கீர் முகமது, அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஹமீது,அறக்கட்டளையின் திட்ட இயக்குனர் சித்தார் கோட்டை ஜமாத் முன் னாள் தலைவர் அல்தாப் உசேன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
செய்யது முகம்மது அறக்கட்டளை சேர்மன் சுல்தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மருத்துவப் பரிசோதனை முகாமில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக கண் பரி சோதனை செய்யப்பட் டவர்களில் கண்ணாடி தேவை என கண் டாக்டர் பரிந்துரை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றுச் சென்றனர்.
இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் தைராய்டு சர்க் கரை பரிசோதனை செய்து கொண்டனர்.
ராமநாதபுரம் நக ராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன்,டாக்டர் புரோஸ்கான், பொட்டக வயல் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹக் கீம், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி,நகராட்சி திமுக கவுன்சிலர்கள் முக மது ஜஹாங்கீர், காளி, ராம நாதன், எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் நஜிமுதீன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கீழக் கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி சீனி இப்ராஹிம், பாமக மாவட்ட செயலாளர் ஹக்கீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செய லாளர் புவனேஸ்வரன், எஸ்டிபிஐ மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த் துரை வழங்கினார்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ அணி தலைவர் தலை மையில் நிர்வாகி கள் தொண்டர்கள் செய்திருந் தனர். முகமது கனி நன்றி கூறினார்.



