fbpx
Homeபிற செய்திகள்குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12 ஆம் தேதி கடை பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்பதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குழந்தை தொழி லாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ப தால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.

அவர்கள் பள்ளிக்கு செல் வதை ஊக்குவிப்பேன். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத் துவேன்.

தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்று வதற்கு என்னால்
இயன்றவரை பாடுபடு வேன் என உறுதி கூறுகி றேன் என கலெக்டர் உறுதி மொழியை வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கலெக் டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணை யாளர் சிவசிந்து உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img