மே 5ம் தேதி நடைபெற்ற வணிகர் தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் சூலூர் சந்திர சேகரனுக்கு வ.உ.சி வணிக செம்மல் விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக முதல்வரிடம் சிறப்பு விருது பெற்ற சூலூர் டி.ஆர்.சந்திரசேகருக்கு பாராட்டு விழா சூலூரில் நடை பெற்றது.
விழாவில் சூலூர் சந்திரசேகர் பேசும்போது, துபாயில் உள்ள லுலு மால் தமிழகத்தில் வராமல் தடுத்து நிறுத்தி வணிகர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று வணிகர்களின் சார்பாக விக்கிரமராஜா முதல் வரிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்களாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் த.மன்னவன், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் சி.பால சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரோ மா பொன்னுசாமி, மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந் தராஜுலு, மாநில கூடுதல் செய லாளர் எஸ்.ராஜசேகரன், சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை பொதுச்செயலாளர் எஸ்.ரவீந்திரன், ஜி.இருதயராஜ், மாவட்ட தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, எஸ்.ராஜ்குமார் மாநில தலைமைச் செயலாளர், சுப்ரமணியம் பொருளாளர் சூலூர் வியாபாரிகள் சங்கம், எஸ்.ஏ.இளங்கோவன் துணைத்தலைவர் சூலூர் வியா பாரிகள் சங்கம், உமரி கணேஷ் செயலாளர் சூலூர் வியாபாரிகள் சங்கம், துணைத் தலைவர்கள் எஸ்.ஏ.செல்வராஜ், தங்கராஜ், எஸ்.வி.முத்துசாமி, துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை மாவட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



