சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் கேர் டி இணைந்து சூலூரில் கோவை மாவட்ட அளவில் பஞ்சாலைக ளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது.
கேர் டி-யின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.மோத்திராஜ் வரவேற்றார்.
கேர் டி இயக்குநர் சி.மா.பிரித்திவிராஜ் தலைமை தாங்கி பேசினார். சிறந்த பஞ்சாலைகள், விடுதிகளை பதிவு செய்வதில் உள்ள துறை ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலக பணியாளர் ஆர்.மலர்விழி, பஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதிகளை பதிவு செய்வது தொடர்பாகவும், பதிவு செய்ய தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.நாகமணி, உள்புகார்க்குழு அமைப்பது தொடர்பாகவும், எவ்வாறு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு பஞ்சாலைகளிலும் ஆய்வு வரும்போது உள்ள நிலை குறித்தும் பேசினார்.
திருச்சி விவ்த் வீல் டிரைவ் இயக்குநரும், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளருமான பேராசிரியர் வெங்கடேசன் தங்கவேல், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறன், தொழிலாளர்களுடான உறவு எவ்வாறு பஞ்சாலைகளுக்கு மேம்படும் என்று பேசினார். பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் நிலை, பாதுகாப்பு குறித்து கருத்தாளர் காயத்திரி ஜெகநாதன் பேசினார். கே.சங்கீதா நன்றி கூறினார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 17 பஞ்சாலைகள் சார்ந்த மேலாளர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் உட் பட 33 பேர் கலந்து கொண்டனர்.
கேர் டி பஞ்சாலை பயிற்சியாளர் வி.அஸ்வதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார்.



