ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பெங்களூருவில் உள்ள ரிலேட்டிவிட்டி மேனேஜ்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்திற்கிடையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எஸ்.என்.ஆர்சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி, மற்றும் ரிலேட்டிவிட்டி மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் நிறு வனத்தின் அசோசியேட் வைஸ் ப்ரெசி டென்ட் கீதாசி. முருகன் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா பேசும்போது, தொழில் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களோடு செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்மூலம் கிடைக்கும் பயிற்சிகளும் மாணவியரின் வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும்.
பாடத்திட்டத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையிலுள்ள இடைவெளியை இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறைக்கின்றன. மாணவிகள் தொழில்துறையின் நடைமுறைகள், அண்மைக்காலத் தகவல்கள், வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதோடு அவர்களது தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை மேம்படும் என்ற நோக்கில் அதற்குத் தேவையான பாடத் திட்டத்தை வகுத்துப் பயிற்சியளிக்க உள்ளோம் என்றார்.



