சாய் சுட்டா பாரின் 300-வது விற்பனை நிலையம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களால் இந்த நிறு வனம் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கோடை காலத்துக்குப் புத்து ணர்வு அளிக்கும் வகை யில், கோடைகால சிறப்பு பானங்களாக பல்வேறு வகை லஸ்ஸி, மோஜி டோஸை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவின் தூய்மை யான நகரமான இந்தூரில் சாய் சுட்டா பார் 2016-ல் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
சொந்தக் கால்களில் நிற்கும் இரண்டு இளம் தொழில் முனைவோர் இந்தியாவில் அதிகமானோர் விரும்பும் தேநீரை மண்குவளைகளில் கொடுக்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
மண்குவளைகளில் தேநீரை வழங்குவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.
சாய் சுட்டா பார் மண் குவளைகளில் தேநீரை வழங்குவதன் மூலம் இந்த நாட்டின் மண்ணை அங் கீகரிக்கிறது. அத்துடன் இந்திய மண்ணுடன் அனைவரையும் தொடர்புப டுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு உகந்த முறை யில் பல்வேறு சுவை, வகைகளில் தேநீரையும் உணவு பிரியர்களின் தே வையையும் இந்த நிறுவனம் பூர்த்திசெய்கிறது.
இந்நிறுவனம் ஒவ் வொரு நாளும் 3 லட்சம் மண் குவளைகளைப் பயன்படுத்துகிறது. 1,500க்கும் மேற்பட்ட குயவர் குடும்பங்களை ஆதரிக்கிறது. நலிந்த பிரிவினரை அதிகமாகக் கொண்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட் டவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
“ஆயிரக்கணக்கான மண்பாண்ட உற் பத்தியாளர்களுக்கு உதவ விரும்பினோம். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் 3 லட்சம் மண் குவளைகள் எங்கள் விற் பனை நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் விற்பனை நிலை யங்கள் தொடர்ந்து விரி வடைந்து வருவதால், ஒவ்வொரு நாளும் 5 லட்சம் மண்குவளைகள் விரைவில் தேவைப்படும்,” என்கிறார் சாய் சுட்டா பார் இணை நிறுவனர் அனுபவ் துபே.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந் தியாவின் அனைத்து நகரங்களிலும் சாய் சுட்டா பார் விற்பனை நிலையம் நிறுவப்பட வேண்டும் என்பதை துபே நோக்கமாகக்கொண் டுள்ளார். இதன் மூலம் இந்திய மக்களுக்கு அதிக மகிழ்ச்சியை பரப்ப முடியும், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.



