புதுடெல்லியில் நடை பெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
நாட்டின் குடியரசு தினவிழா புதுடெல்லியில் வெகுவிமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி அன்று நடைபெற்ற அணிவகுப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.நவீன்சங்கர், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பங்கேற்றார்.
மாணவிகள் டி.பி.நேகா, எஸ்.ஸ்மிர்தி ஆகியோரும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கலை நிகழ்ச்சி களில் பங்கேற்றனர்.
இவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடந்த பாராட்டு விழாவுக்கு, முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, மாணவ-மாணவிகளுக்குக் கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கடந்த 7 வருடங் களாக இக்கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருவதை பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார்.
பி.காம். ஏ அண்டு எஃப் துறைத்தலைவர் முனைவர் ஜி.அகிலா, பி.காம். சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் டி.சந்தானகிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ் வரன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார், பி.கீர்த்தி வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



