கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிவாரண சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
கொரோனா களத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி கூறி உரையை தொடங்கினார். கொரோ னாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே 2 தடுப்பூசிகளை விரைவாகக் கொண்டு வந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படா மல் விட்டிருந்தால் கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை நாடு சந்தித்திருக்கும்.
தடுப்பூசி கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன் னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெளிமாநில தொழிலா ளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.
தற்போது தாக்கல் செய்யப்படும் சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுக்கு சமமானது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது, சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் வளர்வதற்கு தேவையான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது, கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன, சுயசார்பு திட்டம் நமது நாட்டுக்குப் புதிதல்ல, பழங்கால இந்தியா சுய சார்பாக தான் இருந்து வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும், சுகாதார கட்டமைப்பு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 54,184 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் தொடங்கப்படுகிறது.
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புக்கு மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. என அவர் அறிவித்தார்.
சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு
ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையில் 2ம் கட்டமாக 118.9 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படு வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்றும், கூறிய மத்திய நிதியமைச்சர் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு என அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும் என்றும், ஏற்கனவே 41,000 கி.மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அடுத்த 2 மாதங்களில் 80 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்
21 வகையான செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடு பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் கடன் வாங்க உள்ள தாக அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்றார், வரும் நிதி ஆண்டில் இந்த நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
ஆனால் 2025-&2026 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதி பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க திட் டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருப் பதாகவும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேபோல், நடப்பாண்டில் 21 வகையான செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மொத்தத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் 12 லட்சம் கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், 1.53 லட்சம் கோடி மூலதனச் செலவு உட்பட ரூபாய் 34.83 லட்சம் கோடி செலவாகும் எனவும் அவர் கூறினார்.



