தருமபுரி மாவட்டத்தில் 4,61,543 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.24.83 கோடி செலவில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
உலகிற்கே அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட் டைதாரர்களுக்கும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகைப் பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு நீளக் கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை சென்னை தலைமைச் செயலகத்தில் 04.01.2022 அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி முதல்வர் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட் டத்திலும் 04.01.2022 அன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது.
1071 கடைகளில் விநியோகம்
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் 462 முழுநேர நியாயவிலைக் கடைகள், 568 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 41 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1071 நியாயவிலைக் கடைகளில் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 4,60,825 அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்களுக்கும் என மொத்தம் 4,61,543 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.24.83 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பில் 1) ஒரு கிலோ பச்சரிசி, 2) ஒரு கிலோ வெல்லம், 3) 50 கிராம் முந்திரி, 4) 50 கிராம் உலர் திராட்சை, 5) 10 கிராம் ஏலக்காய், 6) 500 கிராம் பாசிப்பருப்பு, 7) 100 கிராம் நெய், 8) 100 கிராம் மஞ்சள் தூள், 9) 100 கிராம் மிளகாய் தூள், 10) 100 கிராம் மல்லித்தூள், 11) 100 கிராம் கடுகு, 12) 100 கிராம் சீரகம், 13) 50 கிராம் மிளகு, 14) 200 கிராம் புளி, 15) 250 கிராம் கடலைப் பருப்பு, 16) 500 கிராம் உளுந்தம் பருப்பு, 17) ஒரு கிலோ ரவை, 18) ஒரு கிலோ கோதுமை மாவு, 19) 500 கிராம் உப்பு 20) ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் 21) அழகிய துணிப்பை அடங்கிய 21 வகையான பொருட்கள் உள்ளன.
‘ஏக்கத்தைத் தீர்த்தது பொங்கல் தொகுப்பு’
அதியமான் கோட்டை ஊராட்சி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சத்யா தெரிவித்ததாவது:
எனது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், குழந்தைகள் என யாரும் இல்லை.
நான் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வருகிறேன். கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறேன். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக வேலை ஏதும் சரியாக கிடைக்கவில்லை. இதனால் போதிய வருமானமும் இல்லை.
பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. மற்றவர்களெல்லாம் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடுவார்கள் எனக்கோ பொங்கல் வைக்க பொருட்கள் வாங்குவதற்கு வருமானம் இல்லாத நிலையில் நான் எப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாட போகிறேன் என்று ஏக்கத்தோடு இருந்தேன்.
இந் நிலையில் முதல்வர், வெல்லம், அரிசி, முழு நீளக்கரும்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை நானும் சிறப்பாக கொண்டாடுவேன் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் உலர் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் நெய், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மல்லித்தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, 500 கிராம் உளுந்தம் பருப்பு, ஒரு கிலோ ரவை, ஒரு கிலோ கோதுமை மாவு, 500 கிராம் உப்பு மற்றும் ஒரு முழு நீளக் கரும்புடன் அழகிய துணிப்பையும் அடங்கிய 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு கிடைத்தது.
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எங் களை போன்ற கூலி வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பேருதவியாக இருக்கும். இதன்மூலம் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும்.
ஆதரவின்றி இருந்த எனக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் வெல்லம், நெய், முழுநீளக்கரும்புடன் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய முதல்வருக்கு எனது கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘மாற்றுத்திறனாளிக்கும்
மகிழ்ச்சி தந்த தொகுப்பு’
அதியமான் கோட்டை ஊராட்சி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளி முனியம் மாள் தெரிவித்ததாவது:
என்னுடைய பெற்றோர்களும் மறைந்துவிட்டார்கள்.
எனக்கு உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லை. நான் நடக்க இயலாத மாற்றுத்திறனாளி. எனக்கு திருமணமும் ஆகவில்லை. எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. எனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ரூ.1000 கொடுக்குறாங்க.
அதை வைத்து தான் எனது தேவைகளை செய்து வருகிறேன். யாரும் இல்லாத, நடக்க இயலாத மாற்றுத்திறனாளியான எனக்கு 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியிருக்காங்க. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
இந்த பொங்கல் பண்டிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வைத்து சிறப்பாக கொண்டாட உள்ளேன். எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்து, எங்களை காத்து வருவதோடு, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘சிறப்பாகக் கொண்டாட கிடைத்த மளிகைப் பொருள்’
அதியமான் கோட்டை ஊராட்சி, சொசைட்டி அருகில் வசித்து வரும் வடமலை மனைவி காளியம்மாள் தெரிவித்ததாவது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட வெல்லம், அரிசி கரும்பு, பாசிப்பருப்பு, ஆவின் நெய் என்று பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மட்டுமின்றி புளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் என்று மளிகை பொருட்களையும் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் வழங்கியுள்ளார்.
இந்த பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளன. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களை போன்ற அனைத்து குடும்பங்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட முழுநீளக் கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ள முதல்வருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அஸ்காவுக்கு பதில் வெல்லம்: நெகிழ்ந்த விவசாயி
அதியமான் கோட்டை ஊராட்சி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் விவசாயியான கோவிந்தன் தெரிவித்ததாவது:
எனக்கு கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் நான் விவசாயம் செய்து வருகிறேன். தற்போது நல்ல மழை பெய்ததால், வயலில் பருத்தியும், மாட்டுத்தீவன பயிர்களும் பயிரிட்டுள்ளேன். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வருடா வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்பு கொடுப்பார்கள்.
அந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் அஸ்கா (சர்க்கரை) தான் இருக்கும். இந்த வருடமும் அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் முதல்வர் அஸ்காவுக்கு (சர்க்கரை) பதிலாக வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி, ஆவின் நெய், என்று தரமான பொருட்களை வழங்கியுள்ளார்.
பொங்கலன்று சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் சேர்த்து வழங்கியுள்ளார். இந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி யாக இருக்கிறது.
மக்களின் தேவையறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ளார். வெல்லம், அரிசி, பாசிப்பருப்பு, ஆவின் நெய், மளிகைப் பொருட்கள், முழு நீளக்கரும்பு, அழகிய பை என பொங்கலுக்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங் கியுள்ள முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாடிட தேவையான 21 வகையான பொருட்களையும் வழங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி மாவட்ட மக்கள் என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தொகுப்பு
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தருமபுரி மாவட்டம்.



