கோவை எஸ்.எஸ்.குளம் ஒன் றியத்துக்குட்பட்ட குரும்ப பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புறநகர் வடக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், நகரச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



