fbpx
Homeபிற செய்திகள்விவோ கல்வித் திட்டத்தில் 100 மாணவர்களுக்கு உதவித் தொகை, ஸ்மார்ட் போன்கள்

விவோ கல்வித் திட்டத்தில் 100 மாணவர்களுக்கு உதவித் தொகை, ஸ்மார்ட் போன்கள்

உலக அளவில் புதுமைமிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் புரோடீன் (முன்பு என்எஸ்டிஎல்) அமைப்புடன் இணைந்து, ‘விவோ கல்வி’ திட்டத்தை துவக்கி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆதரவற்ற 100 மாணவர்களின் படிப்பிற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையையும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 ஸ்மார்ட்போன்களையும் வழங்குகிறது.

கல்வியை ஆதரிக்கும் இந்திய அரசின் நோக்கத்துடன் இணைந்த இந்தத் திட்டம், சமூக மற்றும் பொருளாதார இடைவெளியை குறைத்து, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை பிரிவு இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், தற்போதைய சூழலில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்க ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாக உள்ளன.

தொழில்நுட்பம் வேலையை எளிதாக்குவதோடு, கல்வி மற்றும் அறிவைப் பெறுவதற்கு உதவுவதோடு ஒவ்வொருவரின் ஆர்வத்தை ஆதரிக்கும் அதேவேளையில் அதற்கு அப்பாலும் அவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் கற்றல் மகிழ்ச்சியையும், முகத்தில் புன்னகையையும் கொண்டுவர முயற்சி செய்கிறோம் என்றார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம், தற்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விவோ ஸ்மார்ட்போன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, 100 மாணவர்களின் கல்விக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஆன்லைன் வகுப்பிற்கு உதவிடும் வகையில் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வழங்கியது.
விவோ கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, 65-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 8 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையையும் வழங்கியது.

படிக்க வேண்டும்

spot_img