உலகின் கலை நயமிக்க நகை களின் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சேலம் ஷோரூமில் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை டாக்டர் கிருஷ்ணகுமார், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ஜீவா ரவி, வாசுகி சுரேஷ், ஹாஜீரா தபசும் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்களுடன் சேலம் மலபார் கோல்டு கிளைத் தலைவர் பிரபு ராம்குமார் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவ மைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப் பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் 2022 ஆண்டு உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆயத்தமாகிறது. இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஜனவரி மாதத்திலேயே 22 புதிய ஷோரூம்களை துவங்குகிறது.
இந்தியாவில் ஒரு சில்லறை வர்த்தக நிறுவனம் ஒரே மாதத்தில் இந்தளவில் ஷோரூம்களை துவக் குவது இதுவே முதல் முறையாகும். இதற்காக ஜனவரி 2022ம் ஆண்டு மட்டும் ரூ.800 கோடி அளவில் முதலீடு செய்கிறது.



